Saturday 11 May 2013

அவினாசி அத்திக்கடவு திட்டம்


 அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்  
ஒரு வரலாறு .... ஒரு கோரிக்கை .... ஒரு தீர்வு ...

             கடந்த 60 ஆண்டு காலமாக அவினாசி பகுதி தமிழகத்திலேயே கடும் வறட்சியின் கொடுமையை அனுபவித்து வரும் பகுதியாகும். இத்திட்டம் பாசன திட்டம் இல்லாமல் நிலத்தின் வழியாக ஏற்கனவே இயற்கையாக வந்து கொண்டிருந்த கால்வாய்கள் மூலம் வறண்டு கிடக்கும் குளம், குட்டைகளுக்கு நீரை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து எங்கள் பகுதின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருக்கிறது. காரமடை, மேட்டுபாளையம், அன்னூர்,  திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துகுளி, நம்பியூர், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 7 சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த 35 லட்சம் மக்களுக்கு பயன்படும் திட்டமாகும். 

                          1800 அடிக்குக் கீழே சென்றுவிட்ட நிலத்தடி நீர் மட்டம் இத்திட்டத்தினால் வெறும் 50 அடிக்கு வந்துவிடும். மின்செலவு, ஆழ்குழாய் கிணறு அமைக்கும் செலவு, மின் மோட்டார், ஒயர், பைப், ஆட்கள் கூலி என இவை  அணைத்து  செலவுகளும்  விவசாயிக்கும்,  அரசுக்கும்  மீதமாகும்.
1.25 TMC தண்ணீர் மட்டுமே இத்திட்டத்திற்கு தேவைப்படுகிறது. பவானிசாகர் அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து பல ஆயிரம்  TMC தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. அதில், குறிப்பாக 17 முறை குறைந்தபட்சம் 22 TMC முதல்  அதிகபட்சம் 109.23 TMC வரை தண்ணீர் வெளியேறியுள்ளது. இவ்வாறு அணைகள் நிரம்பி உபரி ஆகும் நீரைத்தான் இத்திட்டதிருக்கு கேட்கிறோம்.

    


           கடந்த 1957 முதல் 1967 வரை அவினாசி சட்டமன்ற உறுபினராக இருந்த (லேட்) திரு.K.மாரப்பகவுண்டர் அவர்கள், அன்றைய  முதல்வர் மரியாதைக்குரிய திரு.கே.காமராஜர் அவர்களிடம் அவினாசி திட்டத்தை மட்டுமே கோரி வந்தார். இந்த 1963 ஆண்டு பிளான்-யை (காமராஜர்திட்டம்) காமராஜர் டில்லி காங்கிரசுக்கு தலைவராகப் போன காரணத்தால் திரு.பக்தவச்சலம் 1967 வரை காலதாமதப்படுத்தி விட்டார். பின்னர் வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியும் 5 முறை முதல்வராக இருந்த போதும் இத்திட்டத்தை நிறைவேற்றவில்லை. காரணம் தி.மு.க, தேர்தலில் நின்ற காலத்தில் இருந்து 1996-ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதற்கு முன்பு காங்கிராசும் 1980க்கு பிறகு அ.தி.மு.க வும் இத்தொகுதியை கைபற்றி உள்ளது(அவர்களும் நிறைவேற்றவில்லை). 2001 யில்  பஸ் சின்னத்தில் நின்ற இத்திட்டத்தின் வேட்பாளர் 38,000 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த வேட்பாளர் தோல்வியை தழுவினாலும் அரசியல் சரித்திரத்தில் ஒரு வேட்பாளரால்........ ஒரு திட்டதால்..... புதிய எழுச்சியால் - ஆண்ட கட்சி டெபொசிட் இழந்தது. தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களும் திட்டத்தை நிறைவேற்ற உறுதி கூறியுள்ளார்.

                        தென்னை, பனை என எல்லா வகை தாவரங்களும் வறண்டு, நிலத்தடி நீரும் வற்றி கால்நடைகளையும் வளர்க்க வழியில்லாமல் வாழ்வாதாரம் தேடி விவசாயிகள் நாடோடி ஆகின்றனர். வாழ்க்கை முழுவதும் கடன்காரனாக ஆகிவிட்டதால், வாழ்க்கை முடித்து கொள்வதற்கும் தற்கொலைகளுக்கு முயற்சிப்பதை தடுத்தாக வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

                                    அவிநாசிக்கு வடக்கே உள்ள புளியம்பட்டி, நம்பியூருக்கு தெற்கேயும்,அவிநாசிக்கு தெற்கில் உள்ள நொய்யலும், கிழக்கில் உள்ள பெருந்துறை அருகிலும் பாசன வசதியுள்ள பகுதிகளாகும். ஆனால்,, அவினாசி வட்டாரத்தில் 60 ஆண்டுகளாக கடும் வறட்சி, மழையின்மை, பாசன வசதியின்மை என்று இருந்தபோதிலும் 1,300 அடிக்கும் கீழே ஆழ்துளை கிணறு அமைத்து, தற்போதைய கடுமையான மின்வெட்டு நேரத்திலும், மஞ்சள், பருத்தி, வாழை, கரும்பு என எல்லா பயிர்களையும் சாகுபடி செய்து கடும் உழைப்பால் நிலத்தை நல்லபடி வைத்துள்ளனர். ஆனால், விவசாயி கடன்காரன் ஆனான்.

                     முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உட்பட கொங்கு மண்டலத்துக்கு வரும் அரசியல் தலைவர்கள் யாரும் இத்திட்டத்தை பற்றி பேசாதவர்களில்லை. குந்தா கழிவு நீர் திட்டம், மேல் பவானித் திட்டம், பாண்டியாறு புன்னம்புழா திட்டம், அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் என ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட பொழுதெல்லாம் திட்டத்தின் பெயர்கள் மட்டுமே மாறுகிறது. யாரும் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை.

                                 தற்போது ரூ.1,863 கோடியே திட்ட செலவாகும் என அரசு கூறுகிறது. காவிரி நதி நீர் பங்கீடு விசியத்தை, உச்சநீதிமன்றத்தை அணுகி, மத்திய அரசுதழில் வெளியிட நடவடிக்கை எடுத்து நீதியை நிலை நாட்டிய முதல்வர் ஜெயலலிதா நிவாரணம் செய்தது போல, கெயில் நிறுவனம் விவசாயிகளை ஏமாற்ற முற்பட்டபோது நெடுஞ்சாலைகளில் குலை பதிக்க ஆணையிட்டது போல மிகவும் உறுதியாக, அத்திக்கடவு அவினாசி திட்டத்தையும் முதல்வர் அறிவிக்க வேண்டும். எனவே, இத்திட்டத்தை அரசு இதழில் வெளியிட்டு, நிதி ஒதுக்கி அலுவலர்களை நியமித்து மிக வேகமாக, போர்கால அடிப்படையில் பணிகளை துவக்க வேண்டும். இனி கொங்கு மண்டல விவசயிகள் அரசியல்வாதிகளின் வெற்று வாக்குறுதிகளை நம்பமாட்டார்கள். இத்திட்டம் வெறும் அறிக்கை அறிவிப்பாக இல்லாமல் ஆக்கபூர்வமாக நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுக்கவில்லை என்றால், அதிமுக வின் எக்கு கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டலம் உருகி, கண்டிப்பாக ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

              திருப்பூர் வடக்கு, பல்லடம், அவினாசி - ஆகிய சட்டமன்ற தொகுதிகள், கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் முதல் மூன்று இடங்களை பிடித்ததை யாரும் மறக்க மாட்டார்கள். அதே சமயம் இத்திட்டத்தை காலதாமதபடுத்தினால், அந்த சரித்தரம் காணமல் போய்விடும்.

அத்திக்கடவு -அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமும், அதன் பயனும்

 1. திட்டத்தின் நோக்கம் பாசன திட்டமாக இல்லாமல் குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்ப வேண்டும் என்பதுதான்.

 2. பவானி ஆற்றில் ஆண்டுக்கு 53 T.M.C தண்ணீர் உபரி நீராக கடலில் சென்று கலக்கிறது. இந்த தண்ணீரை அவினாசி உட்பட 2000க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மொத்தம் 85 பெரிய குளங்களும் 225-க்கு மேற்பட்ட குட்டைகளும் நிரப்ப முடியும். இதற்கு தேவையான நீரின் அளவு 1.2 T.M.C மட்டுமே.

3. இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களை சார்ந்த 1.30 லட்சம் ஏக்கருக்கு  மேற்பட்ட விவசாய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

4. ஆண்டுக்கு ஒருமுறை நிரப்பப்படும் தண்ணீரால் 5 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை வராது. 25 லட்சதிருக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு தேவையான குடிநீர் தன்நிறைவு பெரும்.

5. தற்போதுள்ள மின் பற்றாகுறைக் காலத்தில் இது ஒரு மின் சேமிப்பு திட்டமாக உள்ளது. சுமார் 35 லட்சதிருக்கு மேற்பட்ட விவசாய பகுதிகளில் நீர் எடுப்பதற்கு பயன்படும் மின் மோட்டார்களின் பயன்பாடு குறையும்.

6. விவசாய விளை நிலங்கள் விலை நிலங்களாக(வீட்டு மனைகளாக) மற்றப்பாடுவது முற்றிலும் தடுக்கப்படும். பல்லுயிர்ப் பெருக்கம் ஏற்படும், ஆழ்துளை கிணறுகள் தொண்டபடுவது தடுக்கபடும், இதனால் ஏற்படும் பூகம்பம் போன்ற பேரிடர் தடுக்கப்படும்.

இதுவரை திட்டம் கடந்து வந்த பாதை........

1. 1993-ம் வருடம் மக்கள் சக்தி இயக்க நிறுவனர், காலஞ்சென்ற முனவைர் எம். எஸ். உதயமூர்த்தி ஐயா அவர்கள் தலைமையில் 9 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ளபட்டது.

2. 1996-ல் ஈரோடு மாவட்டம் (தற்போது திருப்பூர் மாவட்டம்) குன்னதூரில் திட்டத்தை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம்.

3. ஈரோடு மாவட்ட பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் அனைவரும் இணைந்து அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களிடம் மனு கொடுத்தனர்.

4. அவினாசி தொகுதியில் அவினாசி அத்திக்கடவு வேட்பாளராக திரு. மோகன்குமரை அவர்களை நிறுத்தி திட்டதிருக்கு அதரவாக 38,000 வாக்குகளை பெற்று அரசின் கவனத்தை திருப்பினர்.

 5. 2003 - யில் கொங்கு பேரவை சார்வாக குமார. இரவிக்குமார் தலைமையில் உண்ணாவிரதம்.

திரு. மரப்பகவுண்டர்,  திரு.அம்பளவான செட்டியார், திரு.ராஜ்குமார் மன்றாடியர், திரு.போன்னுகுட்டி, நடிகர். திரு.சரத்குமார், கிசான். வேலுசாமி, திரு.ராஜாசேனாதிபதி, கொமுகா நாகராஜ், அசநல்லிபாளையம் சுப்பிரமணி மேலும் அன்னூர் மற்றும் குன்னத்தூர் பகுதிகளை சேர்ந்த பலரது பெயர் எனக்கு தெரியவில்லை  இவ்வாறு பெயர்களை சொல்லி கொண்டே போகலாம் அவ்வளவு பேர் இந்த திட்டத்தை மக்களிடமும், அரசிடமும் கொண்டு சென்றனர். 

        இவ்வாறு கட்சி வேறுபாடு இல்லாமல் விவசாயிகள், பொதுமக்கள், தொழிலார்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் ஒரு அணியில் நின்று கடையடைப்பு, ஆர்பாட்டம், சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து அதனால் கைதாகி பொள்ளாச்சி மற்றும் கோவை சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம், சைக்கிள் பேரணி, 1,500 பேர் மொட்டையடித்து போராட்டம், வாகன பேரணி, நடைபயணம், தேர்தலில் போட்டி என அரசின் கவனத்தை ஈர்த்து வெளி மாநிலகளில் உள்ள நீர் ஆதரத்தை நம்பி இல்லாமல், நம்மிடம் உள்ள இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் முலம், மக்கள் வாழ்வில் வசந்தம் வீச அனைவரும் ஓன்று திரண்டு, அரசின் கவனத்தை ஈர்த்து போராடி வருகிறோம்.

இங்ஙனம்
வருங்கால சந்ததிக்கு தண்ணீரையும், வாழ்வாதாரத்தை கேட்கும்.....
தூர்ப்பாக்கியமான நிலையிலுள்ள 
அவினாசி, அன்னூர், குன்னத்தூர், பொதுமக்கள்.


அவினாசி அத்திக்கடவு திட்டம் :-

இந்த உயிர் திட்டதிக்கு  நாங்கள் போராடிய போரட்டங்கள் ஏத்தனை ஏத்தனை .... நீங்களே பாருங்கள் கீழே உள்ள படங்களை:  இந்த பல முகங்கள் கொண்ட அரசியல் வாதிகளை என்ன செய்யலாம்.




கடந்த ஒருவார காலமாக தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்
அறிவிப்பு:-
சோழர்கள் யார் என்பது பற்றி தொடர் ஆய்வு செய்து கொண்டு இருப்பதால் இந்த வளைபக்கத்தில் சரிவர அப்டேட் செய்ய இயலவில்லை, 

அனைவரும் பொருத்தருளவேண்டும். கூடிய விரைவில் இன்னும் மீதமுள்ள விவரங்களை பதிகிறேன். சோழர்கள் யார் என்பது பற்றி எனது ஆய்வினை இந்த பக்கத்திற்கு சென்றால் படிக்கலாம் : http://whoischola.blogspot.in   
   
















































































55 comments:

  1. விரிவான விளக்கமான பகிர்வு... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    http://swamysmusings.blogspot.com/2013/05/blog-post_13.html

    (மேல் உள்ள இணைப்பில் உங்கள் ஊர்க்காரர் உங்கள் தளத்திற்கு வர முடியவில்லை என்கிறார்...)

    ReplyDelete
  2. நல்ல விவரமான விளக்கங்கள்.

    ReplyDelete
  3. good collection of newspaper cuts..keep on posting details about this project so that the current & future generation people can able to know more about the project...thanks to all the well wishers who are trying to communicate with the govt. in implementing this plan..

    -With Regards
    Ambikadevi Vinupradeep - Tiruppur

    ReplyDelete
  4. Good work.. keep it up. we also join hands with you..

    ReplyDelete
    Replies
    1. thank u ,,,please give your number i contact you.....

      Delete
  5. பொங்கியெழுந்து தனது நியாயமான கோரிக்கைக்காகப்போராடிவரும் மக்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி தொலைவில் இல்லை அது அருகில் விரைவில் வரும்.தொடர்ந்து போராடுங்கள். போராடுவோம்.தொலைக்காட்சியில் மதியம் பார்த்தேன். மிஜோரத்தில் இருந்தாலும் உங்களோடு மனதளவில் பங்கேற்கிறேன்.
    வாழ்க வெல்க.பவானித்தண்ணீரில் உங்களுக்கும் உண்டு உரிமை. அதை மதித்திடல் அரசின் கடமை.

    ReplyDelete
  6. all the best thank u ,,,please give your number i contact you.... we also join hands with you.. 8508959798

    ReplyDelete
  7. அவினாசி ஆத்திகடவு திட்டத்திற்காக ஒரு பெடிசனை இணையத்தில் பதிவு செய்து உள்ளேன் ஆனால் இந்த திட்டத்தை பற்றி முழு விவரம் அறிய இணையத்தில் தேடிய பொழுது உங்களின் இந்த பக்கம் கண்ணில் பட்டது, அருமையான ஆழமான வரலாற்றை பதிவு செய்து உள்ளீர்கள் உங்களின் முகவரி அல்லது தொலைபேசி எண் பகிர்ந்தால் உங்களை தொடர்பு கொள்வேன் எண் பெயர் இராஜாராமன் 9840599978, நான் பதிவு செய்துள்ள பெட்சனில் இதுவரை 200 தோழர்கள் ஆதரவு கொடுத்துள்ளர்கள் ஒவ்வொருவரும் கஎழுதிடும் பொழுதும் தினமலரை செண்டடையும் படி இன்னைதுள்ளேன், இது தொடர்பாக உங்களை சந்திக்க தயார் நான் பதிவு செய்துள்ள பெடிசனை இங்கே பதிவிட்டுள்ளேன் உங்கள் கவனத்திற்கு

    https://www.change.org/p/to-political-parties-film-industries-manufactruers-people-of-tamilnadu-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

    ReplyDelete
    Replies
    1. 9840599978 Rajaraman(iruppaineruppai)

      Delete
  8. அவினாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேறாமல் இருக்க என்ன காரணம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  9. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் யாருக்கு அதிக இலாபம் அல்லது நஷ்டம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Benefit for all, loss we cant say but some 0.1 -1 percentage will be there. Who is going to loss there land house like that but it is common. If any good thing will happen some of the difficulties will come we have to face. will any other place face water problem due to this plan? extra water is enough for this plan

      Delete
  10. விரிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி ...

    ReplyDelete
  11. விரிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி ...

    ReplyDelete
  12. ARASIYAL VIYATHIKALIN VAAKKURUTHIKALAI NAMBI PORATTAHTHAI KAIVITTUVIDATHIRKAL. VARUKINDRA THERTHALAI PURAKKANIKKUM MUDIVEDUTHU PIRACHARATHIRKKU ENTHA KATCHIYAIYUM VARAVIDATHEERKAL. VIRAIVIL VETRIKIDAIKKUM....

    ReplyDelete
  13. super i'll support , im from Ellappalayam (annur)

    ReplyDelete
  14. Hi All,

    all people are expecting this plan to be implemented for more than 50 years, but why these politicians are not giving just a words and making us foolish. Really really its horrible to digest for me.

    ReplyDelete
  15. Hi All,

    all people are expecting this plan to be implemented for more than 50 years, but why these politicians are not giving just a words and making us foolish. Really really its horrible to digest for me.

    ReplyDelete
  16. வெற்றி நிச்சயம்

    ReplyDelete
  17. படித்ததில் பிடித்தது
    தொழிலாலர் இயக்கம்
    பத்தாயிரம் முறை விழும்;
    எழும்; வடுபடும்;மறுபடியும் எழும்!
    அதன் குரல்வளை இருக்கப்படும்
    உணர்வற்று போகும் வரை
    தொண்டை அடைக்கப்படும்;
    நீதிமன்றம்
    கேள்விக்கணை தொடுக்கும்;
    குண்டர்களால் வசைபாடப்படும்;
    பத்திரிக்கைகளால் வசைபாடப்படும்;
    பொதுமக்கலின் புருவ நெரிப்பும் கூட
    போர் தொடுக்கும்; அரசியல்வாதிகளால்
    ஏய்க்கப்படும்;
    ஓடுகாலிகளால் மறுப்புரைகள் கூறப்படும்;
    சூதாடிகளால் பலிகொடுக்கப்படும்;
    உளவாளிகளின் ஒற்றறியும் நோயால்
    பீடிக்கப்படும்!
    கோழைகளால் நடுவீதியில் விடப்படும்;
    துரோகிகளால் வஞ்சிக்கப்படும்;
    தலைவர்களால் கூட விற்று விடப்படும்!
    ஓ!
    இவ்வளவு சோதனைகள் இருந்தாலும்
    இந்த வையகம்,
    இதுவரி கண்டிராத உன்னத சக்தி வாய்ந்தது-
    உழைக்கும் மக்களின்
    இயக்கம் ஒன்றுதான்!
    ஆண்டாண்டு காலமாக
    அடிமைப்பட்டிருக்கும் பாட்டாளிகளை
    விடுதலை செய்வதே
    வரலாற்று கடமையாகும்;
    இதன் வெற்றி சர்வ நிச்சயமே!
    1940ம் ஆண்டு “தி மெட்டல் வொர்க்கர்” பத்திரிக்கையில் ஈகில்ஸ்டெப்ஸ் என்ற தொழிலாலியால் எழுதப்பட்டது

    ReplyDelete
  18. I support you

    9842205120

    Sankar - Rasipuram

    ReplyDelete
  19. Intha thittam nirai vera iravani venduvom.

    ReplyDelete
  20. Intha thittam nirai vera iravani venduvom.

    ReplyDelete
  21. unity makes the project fesible

    ReplyDelete
  22. unity makes the project fesible

    ReplyDelete
  23. Excellant efforts. Kodana kodi nandrigal...

    ReplyDelete
  24. நன்றி என் ஆதர்வும் உண்டு

    ReplyDelete
  25. நன்றி என் ஆதர்வும் உண்டு

    ReplyDelete
  26. This scheme is most important

    ReplyDelete
  27. Join this group and give your support and share it

    https://chat.whatsapp.com/GByeQnTf6tiIMXJXMZAKDt


    ReplyDelete
  28. What are the ways to support this project ?

    ReplyDelete
  29. சிறப்பான பதிவு

    ReplyDelete
  30. This time we have to take seriously about this project. Atleast the next coming government should concentrate and complete...

    ReplyDelete
  31. அவினாசி அத்திகடவு திட்டம் பற்றி கூகுள் தேடல் செய்தேன் . உங்கள் வலைதளம் தெளிவான கருத்துக்களுடனும் ஆதாரங்களுடன் உள்ளது. நமது அடுத்த இலக்காக இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவோம்

    ReplyDelete
  32. great work,keep going one day we all make history

    ReplyDelete
  33. i want to know about பாண்டியாறு புன்னம்புழா திட்டம்

    ReplyDelete
  34. பொங்கல் இனாமிற்காக 2500 கோடியை விரயம் செய்தததறகு பதிலாக 7 ச.ம. தொகுதிகளின் 40 இலக்க மக்களின் 60 ஆண்டு கனவு திட்டமான #அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 1900 கோடியில் செயல்படுத்தி இருக்கலாமே. மக்களுக்கான அரசு என்றால் இதைதான் செய்திருப்பார்கள்

    ReplyDelete
  35. Nice .. This project will start on 29/02/2019

    ReplyDelete
  36. How many Tmc water taking for this project

    ReplyDelete
  37. விரிவான பதிவேற்றம் நன்றி

    ReplyDelete
  38. What is the current situation of this project?

    ReplyDelete